மறைந்த கணவனை காண வழியில்லாமல் தவித்த பெண்ணுக்கு உதவிய ஊர்க்காவலர்கள்.

மறைந்த கணவனை காண வழியில்லாமல் தவித்த பெண்ணுக்கு உதவிய ஊர்க்காவலர்கள்.
X

மதுரையை சேர்ந்த லதா (48) என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு, வயது முதிர்ந்த பாட்டிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிவிடை செய்ய சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்துள்ளார், பாட்டியின் உறவினர்கள் அனைவரும் சென்னையில் உள்ளனர், லதா தனியாக இருந்து முதியவர் பாட்டியை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், மதுரையில் வசித்து வந்த லதாவின் கணவர் வெங்கட்பிரபு (54) உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்ததாக தகவல் வந்தது.

இதனையடுத்து, மதுரைக்கு புறப்பட்ட லதாவிற்கு கொடுத்து அனுப்ப, பாட்டியிடம் பணம் இல்லாததால் செய்வதறியாது லதா காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த ஊர் காவல் படையினரிடம் தனது நிலைமையை லதா எடுத்துக் கூறியுள்ளார்.

அதனைக் கேட்ட ஊர்க்காவல் படையினர், தங்களிடம் இருந்த பணம் மட்டுமல்லாமல் மேலும் சிலரிடம் பண உதவி பெற்றும் காரைக்குடியில் இருந்து வாடகைக்கு கார் அமர்த்தி, கையில் செலவுக்கு பணமும் கொடுத்து லதாவை மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஊர் காவல் படையினரின் வருமானம் சிறிதாயினும் பெயருக்கு ஏற்றாற்போல தங்கள் ஊரில் தவித்த பெண்ணை ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பிய ஊர்காவலர்களுக்கு பாரட்டு குவிந்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!