ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: புதிய கட்டுப்பாடு
இந்த தொகையை பெறுவதற்கு புதிய ரேஷன் கார்டு பெறுவது, பெயர் நீக்கத்துக்கு ஏராளமானோர் முட்டி மோதுகின்றனர். இதையடுத்து அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 1,000 ரூபாய் உரிமை தொகைக்கான விண்ணப்பம், ரேஷன் கடைகள் வாயிலாக கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
'ஒரு கார்டுக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்' என்பது உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு, ஏற்கனவே உள்ள கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைக்கு உணவு வழங்கல் துறையின், 'www.tnpds.gov.in' இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் வாயிலாகவே, மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பர். புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபரின் பெயர், வேறு ரேஷன் கார்டில் இருக்கக் கூடாது.
மகளிர் உரிமை தொகை அறிவிப்பால், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க, இரு வாரங்களுக்கு முன் திருமணம் ஆனவர்கள் கூட பெற்றோரின் கார்டில் உள்ள தங்களின் பெயரை நீக்கி தருமாறு விண்ணப்பம் செய்கின்றனர். எனவே, உரிமை தொகை விண்ணப்பம் பெறும் பணி முடியும் வரை, பெயர் நீக்கத்திற்கு விண்ணப்பித்தால், தாங்களாகவே ஒப்புதல் தராமல், உயரதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்பே, அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu