அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிப்பு
முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை இன்று முதல் 2025 ஜூன் 25 ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. எனவே காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை இன்று முதல் 2025 ஜூன் 25 ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம்.மேலும், அரிய வகை சிகிச்சை, அறுவை சிகிச்சை வேண்டுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம். அதற்காக, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து மாதம் ரூ.180 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்த காப்பீட்டு தொகையானது, இன்று முதல் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu