ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகள் : அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி..!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை அமைச்சா் தங்கம் தென்னரசு சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ரூ. 44,125 கோடி மதிப்பில் புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆக. 17-ல் திறந்து வைக்கிறார். முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்த முழுமையான தகவல்கள் குறித்துப் பின்னர், முதல்வர் அலுவலகம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னர், அமைச்சரவையில் மாறுதல் இருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu