நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை..!
ஜல் அகடமியில் மாணவனை அடிக்கும் ஜலாலுதீன்
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாக,தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்கம் முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல்(JAL NEET ACADEMY) என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி உள்ளார்,
இந்த பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரி இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அதிக அளவு மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்பாடுகிறது.
இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வந்துள்ளதாகவும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
எப்படியாவது மாணவர்களை தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தினம் தினம் தேர்வு 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி என மாணவர்களுக்கு மன அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஒரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.
இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் மாணவர்களை பிரம்பால்(கம்பால்) சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதனால் மாணவர்களுக்கு உடலில் கை கால் முதுகு பின்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம்(காயத்தின் படம் உள்ளது)(தாக்கும் சிசிடிவி உள்ளது) ஏற்பட்டுள்ளது,
அதேபோல் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால் இந்த பயிற்சி மையத்திற்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலணியை விட்டு விட்டு வர வேண்டும். அதற்கென பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு(வீடியோ உள்ளது) செய்யப்பட்ட நிலையில் காலணியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை பார்த்து இந்த காலணி யாருடையது என ஆசிரியர் கேட்டு என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன் அந்த மாணவி மீது தூக்கி வீசுவது போன்று அந்த காலணி சக மாணவிகள் மீது விழுவது போன்ற நிகழ்வும் அரங்கேறி உள்ளது(வீசும் சிசிடிவி உள்ளது)
மேலும்,மாணவர்களை தாக்குதல் அவதூறாக அவதூராக பேசுதல் காலணி கொண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் இந்த சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர் மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் காலணியை மனைவி மீது வீசுவது போன்ற வீடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்
புகாரின் அடிப்படையில் காவல் துறை சி எஸ் ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள், இது மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு நல்ல நோக்கத்தில் கொண்டு வந்த நீட் தேர்வினை பிஸ்னஸ் ஆக மாற்றி மாணவர்களிடம் பணம் பறித்து கொடுமைப்படுத்தி இவரை போன்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவ, மாணவிகளின் படிப்பை மார்க்கெட்டிங் செய்து, பணம் பார்க்கும் கலாசாரம் முடிவுக்கு வரும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கொந்தளிக்கின்றனர்.
வீடியோ உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu