வே.க.பட்டி கொங்குநாடு பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை

வே.க.பட்டி கொங்குநாடு பள்ளி மாணவர்கள்  10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை
X

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த, வே.க.பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி, கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சிபெற்று, பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவிகள் சுபிக்ஷா மற்றும் சிபிதா ஆகியோர் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவிகள் ஸ்ரீநிதி, மதுமிதா மற்றும் கவுஷ்யா ஆகியோர் தலா 489 மதிப்பெண்களைப் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளனர். மாணவி பிரித்திகா 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடம் பெற்றுள்ளார்.

கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்வு எழுதிய 153 மாணவர்களில் 30பேர் 475 மதிப்பெண்களுக்கு மேலும், 57 பேர் 450 க்கு «லும், 106பேர் 400க்கு மேலும மொத்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழ் 99, ஆங்கிலம் 99, கணிதம் 98, அறிவியல் 100, சமூகஅறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்ற சாதனை படைத்துள்ளனர்.

மேலும், அறிவியலில் 5பேரும், சமூகஅறிவியலில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜா, தளாளர் டாக்டர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இயக்குநர் ராஜராஜன், முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story
photoshop ai tool