கிருமிநாசினி தெளித்த ஊர் இளைஞர்கள்

கிருமிநாசினி  தெளித்த ஊர் இளைஞர்கள்
X
திருச்செங்கோடு ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்..

திருச்செங்கோடு ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லா கவுண்டம்பாளையம் பகத்சிங் நகரில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய வாலிபர் நல்லா கவுண்டம்பாளையம் கிளையின் சார்பில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கிளை தலைவர் ஜெகநாதன் தலைமையில் சமூக சேவைப் பணி நடைபெற்றது.

நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் , மற்றும் மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் பகுதியிலும், கிருமி நாசினி தெளிக்கபட்டது. வாலிபர் சங்க திருச்செங்கோடு தலைவர் ஜி. கோபி கலந்து கொண்டார். இதில் வாலிபர் சங்கத்தின் சக்திவேல், உதயகுமார், கார்த்தி, பிரகாஷ், மனோஜ், நவீன், ஜீவா, சஞ்சய், விக்னேஷ், தரணி ஆகியோர் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story