திருச்செங்கோடு:திருமணிமுத்தாறு தடுப்பணை முட்புதர்கள் அகற்றம்

திருச்செங்கோடு:திருமணிமுத்தாறு தடுப்பணை முட்புதர்கள் அகற்றம்
X

திருமணிமுத்தாறு தடுப்பணை முட்புதர்களை சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் அகற்றுவதை படத்தில் காணலாம்.

திருச்செங்கோடு மாணிக்கம்பாளையம் திருமணிமுத்தாறு தடுப்பணை பகுதி முட்புதர்களை சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் அகற்றினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாணிக்கம்பாளையம் திருமணிமுத்தாறு தடுப்பணையில் தேங்கியுள்ள குப்பைகள், முள் புதர்களை சுத்தம் செய்யும் பணியில் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்த போது, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில்,குளங்கள்,வாய்க்கால் பகுதிகளில் முள்புதர்கள்,குப்பைகளை தொடர்ந்து சுத்தம் செய்து வருவதாகவும், தொடர்ச்சியாக இந்த சமூக பணியினை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business