திருச்செங்கோடு நியாய விலைக்கடை கட்டுமானப்பணி - ஆய்வு செய்த எம்எல்ஏ

திருச்செங்கோடு நியாய விலைக்கடை கட்டுமானப்பணி - ஆய்வு செய்த எம்எல்ஏ
X

நியாய விலைக்கடைக்கட்டுமான பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.

சீத்தாராம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை,திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தில் புதிதாக நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இன்று ஆய்வு செய்தார்.

கட்டுமானப்பணிகள், கட்டிடத்தின் தரம், நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டிடப்பணிகள் முடித்த நாட்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை, அப்போது அவர் கேட்டறிந்தார். சட்டமன்ற உறுப்பினருடன், ஆய்வில் திருச்செங்கோடு அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி