திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில்  அமைச்சர் திடீர் ஆய்வு
X

ஆய்வுப் பணியை மேற்கொள்ள வந்த அமைச்சர் தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடையே கருத்துக்களை கேட்டறிந்தனர்.

திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு செய்தார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இன்று திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் பி.மூர்த்தி, சேலம் மண்டலத்தில் ஆய்வு செய்தென். இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்திருக்கிறேன் என்றார்.

பொதுமக்களிடம் இருந்து புகார் கிடைப்பதன் அடிப்படையில் உடனடியாக ஆய்வு செய்து வருவதாகவும், அண்மையில் பத்திரிக்கை செய்தியில், திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பத்திரப்பதிவு செய்வதாக செய்தி வந்ததன் அடிப்படையில் இன்று ஆய்வு நடத்தப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். புகார்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி