இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: கழிவுநீர் சாக்கடை சீரமைப்பு

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: கழிவுநீர் சாக்கடை சீரமைப்பு
X

சாலையில் மழைநீர் தேங்குவதற்கு காரணமான சாக்கடை தூர்வாரப்படுவதை படத்தில் காணலாம்.

எலச்சிபாளையத்தில் நிலவிய சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு, ‘இன்ஸ்டா நியூஸ்’ செய்தி எதிரொலியால் தீர்வு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் சாக்கடை அடைப்பால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன், குப்பைகள் தேங்கி, சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைத்து தர வேண்டும் என எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நீச்சலடிக்கும் நூதன போராட்டத்தை நடத்தினார். அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து, இன்ஸ்டாநியூஸ் இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அதிகாரிகள் பிரச்சினைக்குரிய அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடையை ஊழியர்களை, கொண்டு இயந்திரம் மூலம் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது. அதனால் இனிமேல் சாலையில் மழைநீர் தேங்காது என அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business