சேந்தமங்கலம், ராசிபுரம் பகுதியில் ரூ. 13.58 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியில், ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை, கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 13.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொட்டணம் பகுதியில் புதிய அரசு மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், காளப்பநாயக்கன்பட்டியில் புதியதாக துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு கலெக்டர் உமா ஆய்வு செய்தார். தொடர்ந்து, காளப்பநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடியில் குழந்தைகளின் வருகை விபரம், இணை உணவு வழங்குதல், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, ராசிபுரம் நகராட்சி, கோனேரிப்பட்டியில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், அணைப்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10.58 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் புதிய ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அப்போது பஸ்கள் நிறுத்துமிடம், கடைகள், ஹோட்டல்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைவிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu