மின்சார திருட்டில் சிக்கிய 13 பேர்: அபராதம் ரூ. 1.50 லட்சம்!

மின்சார திருட்டில் சிக்கிய 13 பேர்: அபராதம் ரூ. 1.50 லட்சம்!
X
மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரத் திருட்டில் ஈடுபட்ட 13 பேருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் : மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரத் திருட்டில் ஈடுபட்ட 13 பேருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு

மல்லசமுத்திரத்தில் மின்சார திருட்டில் பலர் ஈடுபடுவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கணக்கு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 20 போர் கொண்ட அதிகாரிகள் வீடுகள், கடைகளுக்குச் சென்று மின் இணைப்புகளை நேரில் ஆய்வு செய்தனர்.

13 பேர் மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

ஆய்வின் போது 13 பேர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகள்

ஆய்வின்போது, மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளர் அமுதா, டவுன் இளநிலை பொறியாளர் முருகன், காா்த்தி, வள்ளி, திருநாவுக்கரசு, உதவி கணக்கு அலுவலர் ராஜம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது