குமாரபாளையம் வந்தடைந்தது காவிரிகிழக்கு கரை வாய்க்கால் நீர்

குமாரபாளையம் வந்தடைந்தது   காவிரிகிழக்கு கரை வாய்க்கால் நீர்
X
காவிரி கிழக்கு வாய்க்கால் நீர் குமாரபாளையம் வந்தடைந்தது.
மேட்டூர் கிழக்கு கரை காவிரி வாய்க்கால் நீர் குமாரபாளையம் வந்தடைந்தது.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை கிழக்கு கடை வாய்க்காலில் தண்ணீர் நேற்று வந்து சேர்ந்தது. இதனால் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சடையம்பாளையம், வட்டமலை, தட்டான்குட்டை, ஜெய்ஹிந்த் நகர், ஒட்டன்கோவில், கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலன் பெறுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் இப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business