குமாரபாளையத்தில் 11 மண்டலங்கள் அளவிலான தடகள போட்டிகள் துவக்கம்
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் தடகளப் போட்டிகள் துவங்கியது.
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி சார்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தடகளப் போட்டிகள் துவங்கியது.
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில், 11 மண்டலங்களுக்குய்பட்ட, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 536 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் 960 பேர் பங்கேற்கும் தடகள போட்டிகள் துவங்கியது. டி.எஸ்.பி. இமயவரம்பன் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.
100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஆயிரத்து 500 மீட்டர், ஓட்டப்பந்தயங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. முன்னதாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை டி.எஸ்.பி. இமயவரம்பன் ஏற்றுக்கொண்டார். விளையாட்டு போட்டி ஜோதி ஏற்றி வைக்கப்பட்டு, அதனை கைகளில் ஏந்தியவாறு விளையாட்டு வீரர்கள் மைதானத்தை வலம் வந்தனர்.
இந்த போட்டி நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி தடகள போட்டிகள் அமைப்பின் மாநில தலைவருமான விஜயகுமார் தலைமை வகித்தார். எக்ஸல் கல்லூரி தாளாளர் நடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu