குமாரபாளையம் அருகே தனிமையில் இருந்த வாலிபர் தற்கொலை

குமாரபாளையம் அருகே தனிமையில் இருந்த   வாலிபர் தற்கொலை
X
குமாரபாளையம் அருகே தனிமையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55. கட்டுமான தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மகளும், தேசிங்கு, 19, சுதேசி, 14, என்ற மகன்கள். மகளுக்கு திருமணமாகி கரூரில் வசித்து வருகிறார். மகன் தேசிங்கு, 6 மாதம் முன்பு வேலைக்கு செல்வதாகக்கூறி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

இவர் குமாரபாளையம் வேலை செய்து வருவதாக, அக்கா கோமதியிடம் பேசி வந்துள்ளார். ஏப். 5 இரவு 11:00 மணியளவில் குமாரபாளையம் அருகே பாறையூர் பகுதியில் இருந்து, செல்வகுமார் என்பவர் ஆறுமுகத்திற்கு போன் செய்து, உங்கள் மகன் தேசிங்கு, வீட்டில் விட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

நேற்று நேரில் வந்து பார்த்த ஆறுமுகம், விசாரித்ததில், தேசிங்கு இறந்த அன்று தன் நண்பன் செல்வராஜ் என்பவனுடன் இரவில் டீ சாப்பிட்டு விட்டு வந்து, தற்கொலை செய்து கொண்டார் என தெரிந்தது. தனது மகன் சாவில் எவ்வித சம்தேகம் இல்லை, என போலீசில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி