குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் குத்தி கொலை

குமாரபாளையத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் குத்தி கொலை
X

கொலை நடந்த குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குமாரபாளையத்தில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

குமாரபாளையத்தில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் வாலிபர் பலியானார்.

குமாரபாளையம் பெரியார் நகர் பால்காரர் வீதியில் வசிப்பவர் கோபி, 29. மெக்கானிக். நேற்று மாலை 02:30 மணியளவில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றார். அங்கு வந்த அவருக்கு அறிமுகமான குமாரபாளையம் ஒட்டன்கோயில் பகுதியில் வசிக்கும் டூ வீலர் மெக்கானிக் சசிகுமார், 31, வந்ததாகவும், இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு வெளியில் வந்ததாகவும் தெரிகிறது. இவர்களுக்குள் முன் விரோதம் இருந்ததால் ஆனங்கூர் பிரிவு, அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுப்பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிகுமாரை குத்தியதாக கூறப்படுகிறது.

கோபி அங்கிருந்து செல்ல, சசிகுமார் சாலையை கடந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சசிகுமாரை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். சசிகுமாரின் உடல் ஜி.ஹெச். சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை செய்து கொலை செய்ததாக கூறப்படும் கோபியை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். இது குறித்து டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ க்கள் நந்தகுமார், மலர்விழி, சிவகுமார் உள்பட பலரும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future