குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில்   இளைஞர்  படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் ஐய்யன்தோட்டம் பகுதியில் வசிப்பவர் கார்த்திக் (வயது 27.) காய்கறி கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 09:30 மணியளவில் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சேலம் சாலை வேல்முருகன் ஓட்டல் பகுதியில் வந்து கொண்டிருந்தார். இவருக்கு எதிரே வேகமாக வந்த ஹோண்டா ஷைன் வாகன ஓட்டுனர் இவர் மீது மோதியதில் கார்த்திக் பலத்த அடிபட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்க்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் ஹோண்டா ஷைன் வாகன ஓட்டுனர் குள்ளங்காடு பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், (35 )மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது