பள்ளிபாளையத்தில் போதை வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி

பள்ளிபாளையத்தில் போதை வாலிபர் காவிரி ஆற்றில்  மூழ்கி பலி
X
மதுபோதையில் இருந்த வாலிபர், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்.

பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் வசித்து வந்தவர் அசோக்குமார், 28. வெப்படையில் உள்ள முடி திருத்தும் கடையில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் போதையில், புதன் சந்தை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. போதையில் நீரில் மூழ்கியவர் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவில் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு 11:00 மணியளவில் இவரது சடலம் கரை ஒதுங்கியது. அசோக் குமார் சடலத்தை மீட்ட போலீசார், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்