கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடந்த கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேசினார்.

குமாரபாளையத்தில் கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் எனும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் எனும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் கிராமத்தை நோக்கி இளைஞர் காங்கிரஸ் எனும் தலைப்பில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் அதிஷேசன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேசியதாவது:

ராகுல்காந்தியின் நடைபயணம் நாடு முழுதும் பேசப்பட்டது. இந்த நடைபயணம் கட்சியினரிடையே மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. தலைவர் இட்ட கட்டளையை ஏற்று கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில பொது செயலர் சூர்யா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சதீஷ்குமார், விட்டல்ராஜன், மாவட்ட செயலர் கோகுல்நாத், நகர பொருளர் சிவராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story