ஆவின் விற்பனை நிலையத்தில் அதிகாலையில் பால் திருடிய இளைஞர்கள்

ஆவின் விற்பனை நிலையத்தில் அதிகாலையில் பால் திருடிய இளைஞர்கள்
X
குமாரபாளையத்தில் ஆவின் விற்பனை நிலையத்தில் அதிகாலையில் பால் திருடும் இளைஞர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சி வெளியானது.

ஆவின் விற்பனை நிலையத்தில் அதிகாலையில் பால் திருடிய இளைஞர்கள்

குமாரபாளையத்தில் ஆவின் விற்பனை நிலையத்தில் அதிகாலையில் பால் திருடும் இளைஞர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சி வெளியானது.

குமாரபாளையம் அருகே உள்ள பெருமாபாளையம் புதூர் பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருபவர் சபாபதி, 61. இவரது விற்பனை நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொண்டுவரப்படும் பால் டப்பாக்கள் இறக்கி வைத்து செல்வது வழக்கம். அவ்வாறு இறக்கி வைக்கும் பால் டப்பாக்களில் இருந்து பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போய் வந்தது. இதனால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து தனது ஆவின் பால் விற்பனையகத்திலிருந்து பால் திருடப்படுவதை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராவினை பொருத்தினார். இதன் மூலம் கண்காணிக்க தொடங்கிய பொழுது இரண்டு இளைஞர்கள் வெள்ளை நிற சாக்குப்பையைக் கொண்டு வந்து பால் திருடி செல்லும் காட்சிகள் பதிவானது. தற்பொழுது இளைஞர்கள் பால் பாக்கெட் திருடும் சி.சி.டி.வி காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டதால் இக்காட்சிகள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

குமாரபாளையத்தில் ஆவின் விற்பனை நிலையத்தில் அதிகாலையில் பால் திருடும் இளைஞர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சி வெளியானது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு