3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி குமாரபாளையம் இளைஞர் உலக சாதனை

3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி குமாரபாளையம் இளைஞர் உலக சாதனை
X

குமாரபாளையத்தில் 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த பிரவீன்.

குமாரபாளையத்தில் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜமுத்து-லட்சுமி தம்பதியர். இவர்கள் விசைத்தறி கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது மகன் பிரவீன், வயது 25.

பொறியியல் பட்டதாரியான பிரவீன், சிலம்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் சிலம்பத்தில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என எண்ணினார்.

இந்நிலையில், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி பிரவீன் சாதனை படைத்துள்ளார். இவருக்கு நோபல் உலக சாதனை அமைப்பினர் விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் தி.மு.க.நகர பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்து தொடங்கி வைத்ததுடன், நிறைவில் பழச்சாறு கொடுத்து சாதனையாளரை பாராட்டினார். பயிற்சியாளர் மோகன்குமார், விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்