குமாரபாளையத்தில் ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழாயையொட்டி யாகசாலை வழிபாடுகள்

குமாரபாளையத்தில் ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழாயையொட்டி யாகசாலை வழிபாடுகள்
X

குமாரபாளையத்தில் பஞ்ச முக மகா வீர ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பஞ்ச முக மகா வீர ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றது.

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக சம்ப்ரோஷன விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. டிச. 20 காலை 05:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், காலை 11:00 மணிக்கு காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 05:30 மணிக்கு வாஸ்து சாந்தி, மாலை 07:30 மணி முதல் முதல் கால யாகசாலை பூஜை, டிச. 21 காலை 09:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 10:00 மணிக்கு கோபுர கலச பிரதிஷ்டை, மாலை 05:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.

டிச. 22ல் காலை 06:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, யாக சாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா, 10:30 மணிக்கு மேல் ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மாலை 04:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது. டிச.22 காலை 10:45 மணிவரை அன்னதானம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவை கணக்கம்பாளையம் பிரபு சிவம், ஆலய அர்ச்சகர் சந்தோஷ்சிவம் மற்றும் அவர்களின் குழுவினர்கள் நடத்தி வைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!