சிலம்ப கலையில் சிறுவர், சிறுமியர் உலக சாதனை

சிலம்ப கலையில் சிறுவர், சிறுமியர் உலக சாதனை
X

குமாரபாளையம் குறிஞ்சி சித்தர் சிலம்ப கலைக்கூடத்தில் பயிற்சி பெற்ற சிறுவன், மிதிவண்டி ஓட்டியபடியே சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் காட்சி

குமாரபாளையம் குறிஞ்சி சித்தர் சிலம்ப கலைக்கூடம் சார்பில் சிறுவர், சிறுமியர் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.

குமாரபாளையம் குறிஞ்சி சித்தர் சிலம்ப கலைக்கூடம் சார்பில் சிறுவர், சிறுமியர்கள் சிலம்பம் சுற்றுவதில் புதுமைகளை புகுத்தி உலக சாதனை படைத்தனர்.

இந்நிகழ்வில் சிறுவன் தயாநிதிராஜன், சைக்கிள் ஒட்டியவாறு 20 கி.மீ. தூரம் சிலம்பம் இரு கைகளாலும் சுழற்றியபடி வந்தார். சிறுவன் திவ்யானந், டேபிள் மீது ஒன்றன் மீது ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் பலகையில் நின்றபடி 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றினார்.

அதேபோல சிறுவன் சித்தார்த், ஸ்கேட்டிங்கில் சென்றவாறு சுருள் கத்தியை சுழற்றியபடி 11 கி.மீ. தூரம் வந்தார். சதீஷ், தண்ணீருக்குள் நின்றபடி 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றினார்.

மற்றொரு சிறுவன் சசிதர், ஸ்கேடிங் சென்றவாறு சிலம்பம் சுழற்றியபடி 11 கி.மீ. தூரம் வந்தார். மவுலி, பானையில் ஒற்றைக்காலில் மீது நின்றவாறும் தலையில் முளைப்பாரி தட்டு சுமந்தவாறு இரு கைகளால் 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றினார்.

மேலும் சந்தோஷ், சக்கரம் பொருத்தப்பட்ட பலகையில் ஒற்றைக்காலில் நின்றவாறு 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றினார். இவ்வாற்ய் பல்வேறு புதுமைகளை புகுத்தி, மொத்தம் 34 மாணவ, மாணவியர்கள் குழுவாக 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றினர். இதனை வீடியோ, போட்டோ எடுத்து நோபிள் உலக சாதனை குழுவினர் சான்றுகள் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, சிறுவர், சிறுமியர்களை சாதனையாளார்களாக மாற்றிய சிலம்ப பயிற்சியாளர் கார்த்தியை அனைவரும் பாராட்டினர். அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றவர்கள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, நகர தி.மு.க. செயலர் செல்வம், நிர்வாகிகள் ரகுநாத சுவாமி, ராஜ்குமார் பாலசுந்தரம், தி.மு.க. நகர துணை செயலர் ரவி உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

.

Next Story