அரசு கலைக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம்..!

அரசு கலைக்கல்லூரியில்  உலக தாய்மொழி தினம்..!
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த உலக தாய்மொழி தின விழாவில் முதல்வர் ரேணுகா பேசினார் .

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

அரசு கலைக்கல்லூரியில் உலக தாய்மொழி தினத்தில் 'தமிழ் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என முதல்வர் ரேணுகா அறிவுரை.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரேணுகா பேசியதாவது:

ஒவ்வொரு மாணவரும் தாய் மொழியை நேசிப்பதுடன், அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தாய்மொழி மனிதனுக்கு வாழ்வியலை கற்றுத்தருகிறது. உலக அரங்கில் தாய்மொழியை உயர்த்திப் பிடித்த தமிழ் அறிஞர்களை நன்றியோடு நினைவு படுத்த வேண்டும். கண்ணதாசன் தமிழ் இலக்கியம், தமிழின் தொன்மை அறிந்து கொள்வதுடன், தமிழை படிப்பதனால் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். பிறமொழி கலப்பின்றி தமிழ் பேச வேண்டும், இருப்பதை தமிழ் வளர்ச்சிக்கு ஈகை செய்து, தமிழுக்காக ஓய்வின்றி உழைத்தால் தமிழும், தமிழ் இனமும் வளரும். தாய்மொழியை இகழ்பவரை கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பன்னாட்டுத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது மொழி, பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் யுனெஸ்கோவால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் அறிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!