அரசு பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாட்டம்!

அரசு பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாட்டம்!

படவிளக்கம் : குமாரபாளையம் புத்தர் வீதி நகராட்சி தொடக்கப் பள்ளியில் உலக உணவு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் புத்தர் வீதி நகராட்சி தொடக்கப் பள்ளியில் உலக உணவு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி விடியல் ஆரம்பம் பிரகாஷ் தலைமையில் நடந்தது. உணவின் அவசியம் குறித்து

மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி வழங்கினார்.

பிரகாஷ் பேசியதாவது:

ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ்வதற்கு அவசியமான காரணிகளுள் உணவு முக்கியமானதொன்றாகும். மனிதன் சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசன், குடிப்பதற்கு தேவையான நீர் ஆகிய இரண்டிற்கும் அடுத்ததாக மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டியது உணவு. உணவு இல்லாமல் மனிதனால் சில வாரங்கள் வரை வேண்டுமானால் உயிர்பிழைத்திருக்க முடியும். அதற்கு மேல் மனிதனால் உணவில்லாமல் உயிர்வாழ முடியாது.

மனிதனுடைய இயக்கத்திற்கு தேவையான சக்திகளை (புரதம், கொழுப்பு, காபோவைதரேற், விற்றமின், மினரல் போன்றவை) உணவிலிருந்தே மனிதன் பெற்றுக்கொள்கின்றான். மனிதனுடைய இயக்கத்திற்கு அவசியமான முழுமையான சக்திகளை நீரினாலும் ஒட்சிசனாலும் மட்டும் கொடுக்க முடியாது. அதனால்தான் நீரை மட்டும் உடலிற்கு எடுத்துக்கொண்டு மனிதனால் தொடர்ச்சியாக உயிர்வாழ முடிவதில்லை. மனிதனுக்கு உணவில் உள்ள சக்திகள் அவசியமாகையால் மனிதனுக்கு உணவு அவசியமாகின்றது.

இன்றைய உலகின் வேகமான வாழ்கை முறையில் மனிதனுடைய உயிர்வாழ்க்கைக்கு அவசியமான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து உணவு எடுத்துக்கொள்வதில் நிறைய மனிதர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. அன்றாட செயற்பாடுகளிற்கு மனிதன் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட உயிர்வாழ்க்கைக்கு அவசியமான உணவின் மீதான முக்கியத்துவம் குறைவானதாகவே இருக்கின்றது.

எல்லோருமே தினமும் உணவு எடுத்துக் கொண்டிருக்கும் போது உணவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும், உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், உணவின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் போது பலருக்கும் உணவின் முக்கியத்துவம் என்ன? அதே போல் உணவிற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்வது என்ன? போன்றவை பொதுவாகவே பலருக்கும் எழுகின்ற கேள்விதான்.

பலருக்கு உணவு ஏன் உட்கொள்கின்றோம், உணவு உண்பதை தவிர்ப்பதால் எவ்வாறான விளைவுகளை நாம் எதிர்கொள்கின்றோம், சரியான உணவு முறைகளை பின்பற்றுவதில் உள்ள நன்மைகள் போன்ற விடயங்களை பற்றிய தெளிவு இல்லை. அவற்றை தெரிந்துகொண்டால் உணவின் முக்கியத்துவத்தை புரிந்து வைத்திருக்கின்றோம் என்று சொல்லலாம்.

எந்த மாதிரியான உணவை தெரிவு செய்கின்றோம், எவ்வகையான உணவு முறையை பின்பற்றுகின்றோம், நமது உடலுக்கு தேவையான சக்தி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்கின்றோமா?, தினசரி உணவு எடுத்துக்கொள்ளும் நேர ஒழுங்கமைப்பு போன்ற அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தி உணவு எடுத்துக்கொண்டால்தான் நாம் உணவின் மீது முக்கியத்துவம் செலுத்துகின்றோம் என்று சொல்லலாம்.

நிறையப்பேர் உணவு எடுத்துக்கொள்வதற்கான தினசரி உணவு வேளைகளை பின்பற்றுவதில்லை, பொறுமையாக உணவு உண்பவர்களிலும் பல பேர் தமது உடலுக்குத் தேவையான உணவை தேவைப்படுகின்ற சத்துக்கள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ள மாட்டார்கள், உணவை ரசித்து உண்பதற்குப் பதிலாக மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டு உணவு உண்பார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாக உணவின் முக்கியத்துவம் உணராமல் உணவு எடுத்துக்கொள்கின்றார்கள்.

உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறினால் ஏற்படுகின்ற விளைவுகளையும் மனிதன் எதிர்கொள்ள வேண்டும். மனிதனுக்கு உணவு உடலிற்கான இயக்கத்திற்கு அவசியமாக இருப்பதோடு உடலிற்கான எதிர்ப்பு சக்தியை வழங்கி நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியமாகின்றன. மனிதன் உணவிற்கான முக்கியத்துவத்தை அளிக்கத்தவறும் பட்சத்தில் உடலிற்கான இயற்கையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நிறைய நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்களை சரியான உணவுகள் மூலமாகவே தவிர்த்துக்கொள்ள முடியும். அதற்கு உணவு முறையை சரியாக பின்பற்றி அதற்கான முக்கியத்துவத்தை வழங்கினாலே போதும்.

உணவுப் பழக்கங்கள் நேரடியாக நமது அன்றாட வாழ்க்கை மீது தாக்கம் செலுத்தக்கூடியது. உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளாத நேரத்தில் அன்றைய நாளில் சுறுசுறுப்பாக இயங்க முடியாத நிலையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் நம்மை நாமே புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் உணவின் மேல் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆகவே உணவு நமது அன்றாட நடவடிக்கைகளில் நேரடியாக தாக்கம் செலுத்துவதை புரிந்துகொண்டு உணவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் மாணவ மாணவிகள் உண்ணும் உணவை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆசிரியை விசாலாட்சி, நிர்வாகி தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story