குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார   விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கல்லூரி சார்பில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர்கள் மகேஸ்வரி, சரவணன், தனியார் பள்ளி இயக்குனர் கவியரசி பேரணியை துவக்கி வைத்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்து முக்கிய பகுதிகள் வழியாக வந்து சந்தை பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தின் முன்பு நிறைவு பெற்றது. இதில் மாணவ, மாணவியர்கள் 300 பேர் பங்கேற்றனர். தாய்ப்பால் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறும் மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

இதே போல் குமாரபாளையம் ஜி.ஹெச் சில் பொதுநல அமைப்பினர் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் கொண்டாடிய தாய்ப்பால் வார விழாவில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!