ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்
X
ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. அதில், சிறப்பு அழைப்பாளராக கல்லூரியின் முன்னாள் மாணவி முனைவர் எம்.பி.பூங்குழலி பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தார், தற்பொழுது இவர் வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றுகிறார். "ஆர்வத்தோடுவாழ்வோம்" என்ற தலைப்பில் பேசினார்.


இவ்விழாவில் முனைவர் எஸ். பாமா வரவேற்புரையாற்றினார். விழாவில் கல்லூரி தாளாளர் ந.செந்தாமரை பங்கேற்று தலைமை உரையாற்றினார். கல்லூரி இயக்குனர் ஓம்சரவணா, ஐஸ்வர்யாலட்சுமி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் உட்பட பேராசிரியைகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் முனைவர் கரோலின் நிமிழா நன்றி கூறினார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!