பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
X

காவிரியில் குதித்த பெண்ணை மீட்கும் பணி நடைபெற்றது. 

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பெண் குதித்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், நேற்று காலை 10:30 மணியளவில் பெண் ஒருவர் பாலத்தின் மீதிருந்து குதித்தார். அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் சென்று அந்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரணையில் அந்த பெண் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராதா, 45, என்பதும்,விசைத்தறி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future