குமாரபாளையத்தில் எலி மருந்து சாப்பிட்ட மூதாட்டி பலி

குமாரபாளையத்தில் எலி மருந்து சாப்பிட்ட மூதாட்டி பலி
X

குமாரபாளையம் காவல் நிலையம் - கோப்பு படம் 

குமாரபாளையத்தில் எலி மருந்து சாப்பிட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜம்மாள், 70. இவரது மகன் சண்முகத்தின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். 5 வருடமாக உடல் வலி, கை, கால் வலி இருந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஜன. 19ல், வலி அதிகமாக இருந்ததால், வேதனை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, ஜன. 21ல் அவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மீண்டும் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகி ஜன. 23ல் மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்ந்தார். எனினும், அன்றைய தினம் மதியம் 02:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai future project