குமாரபாளையத்தில் பெண்ணுக்கு அடி, உதை; ஒருவர் கைது, கணவர் தலைமறைவு

குமாரபாளையத்தில் பெண்ணுக்கு அடி, உதை; ஒருவர் கைது, கணவர் தலைமறைவு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் 2வது மனைவியை தாக்கியதாக கணவரை போலீசார் தேடி வருகின்றனர். உறவினர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே கொல்லப்பட்டியில் வசிப்பவர் சுகுணா, 34. இவரது முதல் கணவருடன் விவாகரத்தான நிலையில் சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 44, என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரம் கோவையில் வசித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது கணவர் விஸ்வநாதன் தன் முதல் மனைவியுடன் சேர்ந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சுகுணா, கடந்த 8 ம் தேதி விஸ்வநாதனிடம் அவரது வீட்டின் முன்பே தட்டிக்கேட்டுள்ளார்.

உடனே விஸ்வநாதன் தகாத வார்த்தையால் பேசியும், தலை முடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அடித்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய சுகுணாவிடம், வீட்டின் அருகே உள்ள விஸ்வநாதனின் உறவினர் நளபூபதி, 39, தெலுங்கில் தகாத வார்த்தையால் பேசியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சுகுணா புகார் தெரிவித்தார். அதன்படி, உயர் அதிகாரிகளின் உத்திரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நளபூபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான விஸ்வநாதனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!