குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் பெண் சர்வேயர் படுகாயம்

குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் பெண்  சர்வேயர் படுகாயம்
X

குமார பாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையத்தில் நடந்த வாகன விபத்தில் பெண் சர்வேயர் படுகாயமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் நிள அளவியல் துறை அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் சங்கீதா(வயது 38.). இவர் நேற்று முன்தினம் இரவு 07:30 மணியளவில் வேலை முடிந்து சங்ககிரியில் உள்ள தன் வீட்டிற்கு சென்றார். சேலம் கோவை புறவழிச்சாலை எதிர்மேடு பகுதியில் உள்ள ஜே.கே.கே. நடராஜா கல்லூரி எதிரில் செல்லும்போது, சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஓடி வந்ததால், அவர் மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் இவர் பலத்த காயமடைந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு