பள்ளிபாளையம் அருகே தையல் மெசினில் மின்சாரம் தாக்கி பெண் பலி

பள்ளிபாளையம் அருகே தையல் மெசினில் மின்சாரம் தாக்கி பெண் பலி
X
பள்ளிபாளையம் அருகே தையல் மெசினில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கோரக்காட்டுபள்ளம் பகுதியயை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவகுமாரின் மகள் ராஜதுர்கா, 22. திருமணம் ஆகாதவர். இவர் துணிகள், பைகள் ஆகியவற்றை தையல் மெசினில் மின்சார உதவியுடன் தைத்து தொழில் செய்து வந்தார்.

மாலையில் மெசினை தைக்க முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தையல் மெஷின் வாயிலாக தாக்கியதில், ராஜதுர்கா படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; வழியில் உயிரிழந்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி