தலையில் நீர்க்கட்டியால் பெண் பலி: குமாரபாளையம் அருகே சோகம்

தலையில் நீர்க்கட்டியால்  பெண் பலி: குமாரபாளையம் அருகே சோகம்
X
குமாரபாளையம் அருகே தலையில் நீர்க்கட்டியால் பெண் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குமாரபாளையம் அருகே உப்புகுளம் பகுதியில் வசித்தவர் பழனியம்மாள், 50. தலையில் நீர்க்கட்டி இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். இவரது அம்மா கந்தாயி, 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். ஏப். 30ல் வேலை இல்லாமல் திரும்பி வந்த கந்தாயி, தன் மகள் பழனியம்மாள் வலி தாங்க முடியாமல் எறும்பு மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து, பள்ளிபாளையம் பகுதியில் கல்யாண ஸ்டார் நடத்தி வரும் பழனியம்மாள் மகள் பிரேமாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பழனியம்மாள் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!