கந்து வட்டி கும்பல் மீது பள்ளிபாளையம் போலீசில் பெண் புகார்

கந்து வட்டி கும்பல் மீது பள்ளிபாளையம் போலீசில் பெண் புகார்
X

புகார் கொடுத்த துளசிமணி மற்றும் உறவினர்கள். 

பள்ளிபாளையம் போலீசாரிடம், கந்து வட்டி கும்பல் அச்சுறுத்தல் குறித்து பெண் புகார் கொடுத்தார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி, 40. விசைத்தறி கூலி தொழிலாளி. இவர், தனது குடும்ப சூழ்நிலைக்காக 2 லட்சம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. தொழில் நிலை சரியில்லாததால் பகுதி கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் கந்துவட்டி கும்பல், இவருக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தால், வீட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு, வீட்டை காலிசெய்து விட்டு பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்து, கந்து வட்டி கும்பல் மீது புகார் மனு கொடுத்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!