மின் வாரிய அலுவலகத்தில் பகலில் ஒயர்கள் திருடிய இருவர் கைது

மின் வாரிய அலுவலகத்தில் பகலில்   ஒயர்கள் திருடிய இருவர் கைது
X
குமாரபாளையத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பகலில் ஒயர்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

மின் வாரிய அலுவலகத்தில் பகலில்

ஒயர்கள் திருடிய இருவர் கைது


குமாரபாளையத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பகலில்

ஒயர்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே எதிர்மேடு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள மின்வாரிய அலுவலக பண்டக சாலை முன்பு, நேற்று காலை 07:00 மணியளவில் இரு நபர்கள் மின் ஒயர் சுருள்களை, டூவீலரில் ஏற்றிக்கொண்டு சென்ற போது, அங்கு வந்த மின் வாரிய உதவி பொறியாளர் வாமலை யார் நீங்கள்? எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்க, அவர்கள் வாகனத்தில் வேகமாக தப்பி சென்றனர். இது பற்றி மின்வாரிய பணியாளர்களிடம் சொல்லி, அவர்களை பிடிக்க சொல்ல, அவர்கள் இருவரையும் துரத்தி சென்று பிடித்து வந்தனர். அவர்களிடமிருந்து 40 ஆயிரம் மதிப்பிலான ஒயர் சுருளைகள், டி.வி.எஸ். 50, டூவீலர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றி போலீசில் புகார் தெரிவிக்க, குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் வட்டமலை, வளையக்காரனூர் பகுதியை சேர்ந்த வடிவேல், 28, ஜீவா, 25, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய மின் சுருளை, டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பகலில்

ஒயர்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Next Story