ரத்தப்போக்கால் மனைவி உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது கணவர் புகார்

ரத்தப்போக்கால் மனைவி உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது கணவர் புகார்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

மனைவி உயிரிழந்ததால் குமாரபாளையம் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் கணவர் புகாரளித்துள்ளார்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் கார்த்தி, 32. இவரது மனைவி ரம்யா, 25. இருவருக்கும் 2016ம் ஆண்டு திருமணமாகி, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் ஆனங்கூர் பிரிவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலுவலக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 27ம் தேதி, தனது மனைவியை 2வது பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். பின்னர் அன்று காலை 10:00 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், ரம்யாவுக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, குமாரபாளையம் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் கார்த்தி குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story