குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் பதவி யாருக்கு? பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு
பைல் படம்.
குமாரபாளையத்தில் நகர் மன்ற தலைவர் பதவி யாருக்கு? என்பது அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி வருகிறது.
குமாரபாளையம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 1986ம் ஆண்டில் முதல் நகரமன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ரகுநாதன் முதல் நகரமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அக்.25, 1996ல் தி.மு.க. வை சேர்ந்த சுயம்பிரபா மாணிக்கம், அக்.25, 2001ல் தி.மு.க. வை சேர்ந்த ஜெகன்னாதன், அக். 28, 2006ல் தி.மு.க. வை சேர்ந்த சேகர் என நான்கு முறையும் தி.மு.க.வினர்தான் நகரமன்ற தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
அக். 25, 2011ல் சிவசக்தி தனசேகரன் நகரமன்ற தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அ.தி.மு.க.வை சேர்ந்த இவருக்கு கட்சியில் சீட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆயினும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் சென்று அவரது கையால் மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை பெற்று, அ.தி.மு.க. நகரமன்ற தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் தற்போதைய எம்.எல்.ஏ. தங்கமணி பங்கேற்று வாழ்த்தினார். தற்போது ஆளும்கட்சி தி.மு.க.வாக இருக்கையில், விட்ட இடத்தை இனி விடக்கூடாது என்று தீவிரமாக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வினரும், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல், நகரமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். நகரமன்ற தலைவர் பதவியை அடைந்தே ஆக வேண்டும் என எம்.எல்.ஏ. தங்கமணி சமீபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வினரை கேட்டுக்கொண்டுள்ளார். குமாரபாளையத்தில் நகர் மன்ற தலைவர் பதவி யாருக்கு? என்பது பெறும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu