குமாரபாளையத்தில் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய பொதுநல அமைப்பினர்

குமாரபாளையத்தில் நூலகத்திற்கு  புத்தகங்கள் வழங்கிய பொதுநல  அமைப்பினர்
X

 குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தொழிலதிபர் அண்ணாதுரை 40 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார்.

குமாரபாளையத்தில் உள்ள நூலகத்திற்கு பொதுநல அமைப்பினர் புத்தகங்கள் வழங்கினர்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் அண்ணா நூலகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல பொதுநல அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.

பல அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் புத்தகங்களை கொடுத்து உதவி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் அண்ணாதுரை 40 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார்,

தளிர்விடும் பாரதம் அமைப்பினர் நான்காயிரம் மதிப்பிலான புத்தங்களையும், அப்துல்கலாம் பசுமை அமைப்பினர் சார்பில் ஐந்தாயிரம் மதிப்பிலான புத்தங்களையும் தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வத்திடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சயில் நிர்வாகிகள் சீனிவாசன், தனபால், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story