பா.ஜ.க சார்பில் கேரளாவுக்கு நிவாரணப்பொருள் அனுப்பிவைப்பு

பா.ஜ.க சார்பில் கேரளாவுக்கு நிவாரணப்பொருள் அனுப்பிவைப்பு
X

கேரளாவில், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. 

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில், கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளா மாநிலத்தில் தொடர் மழையால், ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் நிகழ்வு, நகர தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

அவ்வகையில், 200 லுங்கிகள், 240 காவி வேட்டிகள், 300 கர்சீப், 35 சர்ட் உள்ளிட்டவை நிவாரணப் பொருட்களாக அனுப்பப்பட்டன. நிர்வாகிகள் செயலர்கள் குமார், தனசேகரன், பொது செயலர் சுகுமார், கல்வி பிரிவு தலைவர் கண்ணன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!