குமாரபாளையம் டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

குமாரபாளையம் டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
X

குமாரபாளையம் டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கத்தார் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலர் தனபால் அறிக்கை சமர்ப்பித்தார். புதிய தலைவராக ராஜ்குமார், செயலராக சக்திவேலன், பொருளாளராக பிரபு உள்ளிட்ட நிர்வாகிகளை முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பதவியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். முன்னாள் கூட்டு மாவட்ட செயலர் விஜயகுமார் புதிய உறுப்பினர்களை இணைத்தார்.

இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ஆதரவற்றோர் மையத்திற்கு 5 மூட்டை அரிசி, ஏழை மாணவ, மாணவியர்கள் 5 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகியனவற்றை முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் சந்திரசேகரன், மோகன் வழங்கினார்கள். துணை மாவட்ட ஆளுநர்கள் தமிழ்மணி, செந்தில்குமார், மாவட்ட செயலர் வேலு, உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி பேசினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!