குமாரபாளையத்தில் வள்ளலாருக்கு பொதுநல ஆர்வலர்கள் சிறப்பு வழிபாடு, அன்னதானம்

குமாரபாளையத்தில் வள்ளலாருக்கு பொதுநல ஆர்வலர்கள் சிறப்பு வழிபாடு, அன்னதானம்
X

குமாரபாளையத்தில் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் வள்ளலாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் வள்ளலாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கபட்டது.

தைப்பூச திருநாளில் வள்ளலார் ஜோதிமயமானதால் வடலூரில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம். வள்ளலாரின் பக்தர்கள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்.

குமாரபாளையம் வள்ளலார் பக்தர்கள், தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், விடியல் ஆரம்பம் பிரகாஷ், சேவற்கொடியோன் பேரவை பாண்டியன் உள்ளிட்டோர் சார்பில் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் வள்ளலார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆதரவற்றவர்கள், யாசகர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்