குமாரபாளையம் நகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை

குமாரபாளையம் நகராட்சியில் காலி பணியிடங்களை நிரப்ப பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை
X
குமாரபாளையம் நகராட்சியில் காலி பணியிடங்கள் நிரப்ப பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சியில் காலி பணியிடங்கள் நிரப்ப பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுநல ஆர்வலர்கள் கூறியதாவது:- குமாரபாளையம் நகராட்சியில் கணக்காளர், அலுவலக மேலாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 33 வார்டுகளில் வடிகால், வாட்டர் டேங்க், மின் கம்பம், தார் சாலை, குப்பைகள் அகற்றுதல், பொதுக்கழிப்பிடம் பற்றாக்குறை என நாளொரு பிரச்சனை உருவாகி வருகிறது. இவைகளை சமாளிக்க, இருக்கும் பணியாளர்களால் முடியாது என்ற நிலையில், காலி பணியிடங்கள் இருந்தால் எவ்வாறு சமாளிக்க முடியும்? விரைவில் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புகள், மக்கள் தொகை அதிகரித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!