வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் சமூக ஆர்வலர்

வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் சமூக ஆர்வலர்
X

விட்டலபுரி ராமர் கோயில் அருகில் வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கி வரும் சமூக ஆர்வலர்.

குமாரபாளையத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கி வருகிறார்.

குமாரபாளையம் விட்டலபுரியில் மின் மோட்டர்களுக்கு காயில் கட்டும் பணி செய்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி, 57. இவர் வாரம்தோறும் முதியவர்களுக்கு பிஸ்கட் வழங்கி வருகிறார். இதனை வாங்க பல பகுதிகளில் இருந்தும் முதியோர்கள், சிறுவர், சிறுமியர் வருகின்றனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

எனது பெற்றோர்கள் பிஸ்கட் விரும்பி உண்பார்கள். பெற்றோர்களுக்கு சாப்பாடு போடுவதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் முதியோர்களும் பிஸ்கட் விரும்பி உண்பார்கள் என்பதை உணர மாட்டார்கள். என் பெற்றோர்களாக எண்ணி, சிறிய சந்தோசத்தை அவர்களுக்கு தரும் வகையில் பிஸ்கட் கொடுத்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்