குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி களை கட்டும் விற்பனை
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆயுத பூஜையையொட்டி கடைகளில் விற்பனை களை கட்டியது.
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆயுத பூஜை விழாவையொட்டி கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
இந்தியாவில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களின் மண்வாசனை கலாச்சாரத்திற்கு ஏற்ப பூஜைகளும் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா நடைபெற உள்ளது. ஆயுத பூஜையன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள், லேத் பட்டறைகளில் பூஜைகள் நடத்தப்படுவது உண்டு.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள் ஆகியவற்றில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை செய்யப்படுவது வழக்கம். அதே போல் சாயப்பட்டறைகள், ஆட்டோமேடிக் தறிக்கூடங்கள், இதர தொழில் நிறுவனங்களிலும் ஆயுதபூஜை போடப்பட்டு, தங்கள் தொழில் செய்ய உதவிடும் பொருட்களை நன்றி செலுத்தும் விதமாக வணங்குவார்கள்.
கல்வி நிறுவனங்களில் விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, பாட நூல்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுண்டு. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நாளையொட்டி பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் மார்க்கெட் பகுதியில் திரண்டனர். இதற்காக தேங்காய், வாழைப்பழங்கள், விபூதி, குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்கள், பூஜையில் படைக்கப்படும் பொரி, கடலை, மற்றும் பழ வகைகள் கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் வாழைக்கன்றுகள். மாவிலை கடைகளும் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களும் தங்கள் தொழிற்கூடங்கள் மற்றும் வீடுகளில் ஆயுத பூஜை செய்ய பூஜை பொருட்கள் வாங்கி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu