குமாரபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டிய மாட்டுப் பொங்கல்
குமாரபாளையத்தில் மாட்டுப் பொங்கல் விழா களைகட்டியது.
குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் மாடுகள், ஆடுகள், எருமைகள் ஆகிய கால்நடைகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணங்கள் கொடுக்கப்பட்டு, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகங்கள் இடப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன. கழுத்தில் மஞ்சள் கோம்பு கட்டப்பட்டது.
சாணத்தில் பிள்ளையார் செய்து, சாணத்தால் தெப்பக்குளம் கட்டி, அதில் பால், இளநீர், பண்ணீர், திருமஞ்சன தீர்த்தம், ஆகியவற்றை ஊற்றி, அதன் முன்பு தலைவாழை இலையில் பொங்கல், வாழைப்பழங்கள், தேங்காய், கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து, கால்நடைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
பூஜைக்கு பின் பூஜையில் வைக்கப்பட்ட பால், பழங்கள் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டன. அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பிரசாதம், பொங்கல், கரும்பு ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu