கால்நடைகளுக்காக கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு..!
கால்நடைகளுக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர்
மேட்டூர் கிழக்குக்கரை வாய்காலில் நிலத்தடி நீர், கால்நடைகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் ஆண்டுதோறும் விவசாயத்திற்காக ஜூலை மாத இறுதியில் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருப்பதால், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
அதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி உள்ளிட்ட பல பயிர்களை பயிரிட முடியாமல் விவாசாயிகள் தவித்து வருகின்றனர். தற்போது கடும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், கால்நடைகளுக்கு கூட போதிய தண்ணீர் கொடுக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
வறட்சி நிலை நீடித்து, நிலத்தடி நீர் மட்டமும் மிகவும் குறைந்து, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனை தடுக்க, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
தேர்தல் சமயத்தில் இதனால் போராட்டம் போன்ற நடவடிக்கையில் பொதுமக்கள், விவசாயிகள் ஈடுபட்டால் என்ன ஆவது? என எண்ணி, தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது எனவும், இந்த தண்ணீர் ஏப். 10 வரை வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த குறுகிய நாட்களாவது தண்ணீர் வந்தால் தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu