குமாரபாளையம் அருகே கத்தி குத்து வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

குமாரபாளையம் அருகே கத்தி குத்து வழக்கில் தேடப்பட்ட    நபர் கைது
X
குமாரபாளையம் அருகே கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அருகே ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 31.) கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்னால் உள்ள சிவராஜ்,( 45, )வீட்டிற்கு அருண் சென்ற போது,அங்கு சிவராஜுடன், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தங்கவேல்,( 60, )என்பவர் சண்டை போட்டுகொண்டு இருந்துள்ளார். இதனை அருண் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த தங்கவேல் கட்டையால் அருண் தலையில் தாக்கியதுடன், கத்தியால் வயிற்றில் குத்தினார். இதனால் படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஈரோடு அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். தங்கவேல் தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை தேடி வந்த நிலையில், ஆனங்கூர் சாலை, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த தங்கவேலுவை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story