சுவர் விளம்பரங்கள், பேனர்கள், அகற்றும் பணி தீவிரம்!

சுவர் விளம்பரங்கள், பேனர்கள், அகற்றும் பணி தீவிரம்!
X

படவிளக்கம் : குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலம் பகுதியில் சுவர் விளம்பரங்களை பணியாளர்கள் அகற்றினர்.

குமாரபாளையத்தில் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

சுவர் விளம்பரங்கள், பேனர்கள், அகற்றும் பணி தீவிரம்

குமாரபாளையத்தில் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி குமாரபாளையம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் அழித்தல், கொடிக்கம்பங்கள் அகற்றுதல், பிளெக்ஸ் பேனர்கள் அகற்றுதல் ஆகியன நடந்தன. சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பாலம் கீழ் பகுதியில் அரசியல் கட்சியினர் எழுதியிருந்த பெரிய அளவிலான சுவர் விளம்பரத்தை பணியாளர்கள் அழித்தனர். பல இடங்களில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சமீபத்தில் நடந்த காளியம்மன் திருவிழாவையொட்டி அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் கோவில் வளாகம், பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட பல இடங்களில் பிளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவைகளை சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் வங்கி முன் டூவீலர்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையம் சேலம் சாலையில் தான் பெரும்பாலான வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு முன் டூவீலர்களை நிறுத்தி வைக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த, போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி தரவேண்டும். ஆனால் இந்த வங்கி நிர்வாகத்தினர் இது பற்றி சற்றும் கவலை படாமல் உள்ளனர். குறுகிய அளவிலான சாலையில் டூவீலர்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறு ஏற்படுகிறது. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!