வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம்
குமாரபாளையம் விட்டலபுரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் நேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம் நடந்தது. இன்றும் இதே முகாம் நடைபெறவுள்ளது. மேலும் நவ. 18,19 ஆகிய சனி, ஞாயிறு கிழமைகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் ஆகியவை நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தாலுக்கா அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. குமாரபாளையம் விட்டலபுரி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா, நகராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வாக்காளர் பெயர் திருத்தும், சேர்த்தல் முகாமில் பார்வையிட்டு, பொதுமக்க ளுக்கு தேவையான உதவிகள் செய்யுமாறு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்:
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றிற்கு நவம்பர் மாதம் 4,5 மற்றும் 18,19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் எற்பாடு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu